nanbanidam_sollungal_vettri_fm

அக்காமாரை கரை சேர்க்க போராடும் தம்பி..

அண்ணா வணக்கம்.ரொம்ப நாட்களாய் நண்பனிடம் சொல்லுங்க  நிகழ்ச்சி கேட்டுக்கொண்டு வருகின்றேன்.எனக்கு 1 வயது இருக்கும் போதே அம்மா இறந்து விட்டார் பின் அப்பாவுடன் தான் இருந்தோம் பின்னர் அவரும் இறந்து விட்டார்.எனக்கு 2 அக்காமாரும் 1 அண்ணாவும் இருக்கின்றனர்.சொந்தம் என்று சொல்லி யாரும் இல்லை.அண்ணா திருமணம் முடிடித்து விட்டார்.அக்காமார் இருவரும் படித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.நானும்  படித்துக்கொண்டு வேலை பார்க்கின்றேன்.எனக்கு தற்பொழுது உள்ள குழப்பம் எவ்வாறு அக்கமார் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது.எனக்கோ திருமணம் செய்து வைக்க கூடிய வயதோ அனுபவமொ இல்லை.அண்ணாவோ அது பற்றி அக்கறை கொள்வதாய் தெரியவில்லை.நான் என் செய்வதென்று அறியாது குழப்பத்தில் உள்ளேன்.படிப்பில் சரியா கவனம் செலுத்தமுடியவில்லை.தற்கொலை செய்து விடலாமொ என எண்ணத்தோன்றுகின்றது.

i am x.from jaffna.

Leave a Reply